திருவேற்காடு நகராட்சியில் புதிய கவுன்சிலர்கள் பதவி ஏற்பு
திருவேற்காட்டில் கவுன்சிலர்கள் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலைப் பாடி அசத்திய நகராட்சி ஆணையர்.;
திருவேற்காடு நகராட்சியில் கவுன்சிலர் பதவி ஏற்பு நிகழ்ச்சியின் போது நகராட்சி ஆணையரே தமிழ்த்தாய் வாழ்த்து நாட்டுபண் பாடலை பாடி அசத்தினார்.
திருவேற்காடு நகராட்சியில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 11, காங்கிரஸ் 1, சுயேட்சைகள் 6 பேர் வெற்றி பெற்றனர். இவர்கள் திருவேற்காடு நகராட்சி அலுவலக வளாகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேஷ் முன்னிலையில் 18 பேரும் நகர மன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்று கொண்டனர்.
அனைவரும் பதவியேற்றுக் கொண்ட போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என முழுமையாக பெயரை கூறி பதவி ஏற்றது போல் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் அனைவரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்டைலில் தங்களது முழுமையான பெயரை கூறி பதவியேற்று கொண்டனர்.
பதவியேற்பு விழாவை நடத்தி வைத்த தேர்தல் நடத்தும் அதிகாரியும் நகராட்சி ஆணையர் ரமேஷ் நிகழ்ச்சி தொடங்கும் போதும் நிகழ்ச்சி முடியும்போது தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தை அவரே பாடி அசத்தினார். திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடப்பது போல் நகரமன்ற அலுவலகம் முழுமையாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.
திருவேற்காடு நகராட்சியில் கவுன்சிலர் பதவி ஏற்பு நிகழ்ச்சியின் போது நகராட்சி ஆணையரே தமிழ்த்தாய் வாழ்த்து நாட்டுபண் பாடலை பாடி அசத்தினார்.