ஆபத்தான கட்டிடத்தில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

பலமுறை சம்பந்தப்பட்ட ஊராட்சி, மருத்துவ துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட நிர்வாகத் திற்கும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது;

Update: 2023-03-07 03:45 GMT

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே ஆபத்தான கட்டிடத்தில் இயங்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே ஆபத்தான கட்டிடத்தில் இயங்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை வேறு புதிய கட்டிடம் அமைத்து அதில் இயங்க  நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல கிராமத்தில் சுமார் 7000.க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வெங்கல், கல்பட்டு, வெங்கல் குப்பம், ஆவாஜி பேட்டை, மாம்பள்ளம், பாகல்மேடு, செம்பேடு, காதர்வேடு, உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் காய்ச்சல் தோல் நோய், சளி, நாய் கடி மற்றும் உடலில் ஏற்படும் பிரச்னைகளுக்கு இந்த அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ மனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இந்த நிலையில், இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடம் ஆனது 1981 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடம் ஆகும் இக்கட்டிடம் கட்டி 42 ஆண்டுகள் ஆகிய நிலையில் தற்போது கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. பழைய கட்டிடம் என்பதால் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டு மேற்கூறையில் உள்ள சிமெண்ட் கான்கிரீட் பூசுகள் உதிர்ந்து கட்டிடத்திற்குள் உள்ளே உள்ள இரும்புக் கம்பிகள் வெளியே தெரிவதால்,பொதுமக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மழைக்காலங்களில் மழைநீர் உள்ளே கசிந்தும் மழை நீர் உள்ளே வரும் அவல நிலையும் தொடர்கிறது.. கட்டிடம் மிகவும் பலவீனமாக உள்ள காரணத்தினால் இந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அச்சத்துடன் வந்து மருத்துவம் பார்த்து செல்கின்றனர்.

இதுகுறித்து நோயாளிகளும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், சமீபத்தில் இந்த மருத்துவமனையை ஆய்வு செய்த பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் இதற்குரிய இடத்தை தேர்வு செய்து அனைத்து வசதிகளுடன் மருத்துவமனையை மேம்படுத்துவதாக உறுதியளித்து சென்றார் ஆனால் தற்போது வரை அதற்கான வேலைகள் எதுவும் செய்ததாக தெரியவில்லை என்றும் இது குறித்து  சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், மருத்துவ துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் வலியுறுத்தி வந்தாலும் இதுவரை  எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

எனவே ஆபத்து விளைவிக்கும் முன்பே இந்த மருத்துவமனையை கிராமத்தில் காலியாக பூட்டி கிடக்கும் அரசு நடுநிலை பள்ளிக்கு மாற்றி அமைத்து இந்த பழைய கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று மக்கள் தர மக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது இதுகுறித்து மாவட்ட ஆட்சி தலைவர் கவனம் செலுத்தி துரித  நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பு மக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News