பூந்தமல்லி நீதிமன்றம் அருகே அரசுப் பேருந்தின் டயர் வெடித்து விபத்து, ஒருவர் படுகாயம்
பூந்தமல்லி நீதிமன்றம் அருகே அரசுப் பேருந்தின் டயர் வெடித்து நடந்த விபத்தில் ஓட்டுனர் படுகாயம் அடைந்தார்.
.திருநின்றவூரில் இருந்து தி.நகர் நோக்கி அரசு பேருந்து புறப்பட்டது. அப்போது பூந்தமல்லி நீதிமன்றம் எதிரே சென்று கொண்டிருந்தபோது பேருந்தின் டயர் திடீரென வெடித்தது.
இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஓட்டுனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.