ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அடிக்கல்

பூந்தமல்லி அருகே ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.;

Update: 2022-08-28 08:28 GMT

பூந்தமல்லி அருகே ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், பாரிவாக்கம் ஊராட்சியில், ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமையவிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் வி.தணிகாசலம் அனைவரையும் வரவேற்றார். பூவிருந்தவல்லி கிழக்கு ஒன்றிய செயலாளர் ப.ச.கமலேஷ், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார், பொதுப்பணித்துறை மருத்துவப் பிரிவு உதவி செயற்பொறியாளர் பி.புஷ்பலிங்கம், உதவி பொறியாளர் எம்.மனோகரன், மாவட்ட கவுன்சிலர் ஏ.ஜி.ரவி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் எம்.முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவிற்கு பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ. ஆ.கிருஷ்ணசாமி தலைமை தாங்கி ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் 1738 சதுர அடி பரப்பளவில் புதியதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

அப்பொழுது அவர் பேசும் போது

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற நோயாளிகள் பிரிவு கட்டிடம், அவசர சிகிச்சை பிரிவு, ஆண்கள் புற நோயாளிகள் பரிசோதனை அறை, பெண்கள் புற நோயாளிகள் பரிசோதனை அறை, வெளி நோயாளிகள் காத்திருப்பு அறை, ஆண்களுக்கான ஊசி போடும் அறை மற்றும் பெண்களுக்கான ஊசி போடும் அறை ஆகிய வசதிகளுடன் அமைய உள்ளது. மேலும் நோயாளிகளும் அவர்களுடன் வருபவர்களும் சிரமம் இன்றி சிகிச்சை பெற்றிட தேவையான சாய்தள நடை பாதை வசதி, குடிநீர் வசதி, மற்றும் கழிவறை வசதியுடன் கட்டப்பட உள்ளது. இந்தக் கட்டிடம் செயல்பாட்டிற்கு வரும்போது பாரிவாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் உடனடியாக சிகிச்சை பெற பேரு உதவியாக இருக்கும் என்றார்.

இந்த விழாவில் பாணவேடுதோட்டம் குமரேசன், ஊராட்சி துணைத் தலைவர் பி.கே.ராஜா, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரதீபா மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள், பி.எல்.எப். மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முன்னதாக பூவிருந்தவல்லி நகரம் 9வது வார்டு அம்பேத்கர் நகரில் நகரக் கழகச் செயலாளர் ஜி. ஆர். திருமலை தலைமையில் நகர் மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு புதிய மின்மாற்றியை துவக்கி வைத்தார் .இந்நிகழ்ச்சியில் நகர் மன்ற துணைத் தலைவர் ஸ்ரீதர் நகர் மன்ற கவுன்சிலர் செந்தாமரை நெல்சன் உள்பட கவுன்சிலர்கள் நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் உள்ளனர்.

Tags:    

Similar News