former cm kamarajar birthday celebration வெங்கல் கிராமத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா.

former cm kamarajar birthday celebration தமிழகத்திற்கு பொற்கால ஆட்சி தந்த மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாள் விழா இன்று தமிழகமெங்கும் கொண்டாடப்படுகிறது.

Update: 2023-07-15 04:45 GMT

காமராஜர் பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிர்வாகிகள்.

former cm kamarajar birthday celebration

தமிழகத்தின் தனது ஆட்சிக்காலத்தில் பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டு வந்து பொற்கால ஆட்சியைத் தந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர்.  அவர்  மறைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும் அவரது பிறந்த நாளை தமிழக அரசு கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட உத்தரவிட்டுள்ளதால் இன்று மாநிலம் முழுவதும் பள்ளிகள் இதற்காகவே வேலை நாளாக கருதி இயங்கி வருகிறது.

தமிழகத்தில் உள்ள ஏழை மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்ற ஒப்பற்ற நோக்கத்தில்  மதிய உணவுத்திட்டம், சீருடைத்திட்டம் போன்ற உயரிய திட்டங்களை தன் ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்தார் மறைந்த முதல்வர் காமராஜர். மேலும் அவருடைய ஆட்சிக்காலத்தில்தான் தமிழகத்தில் பல குக்கிராமங்களிலும்  பள்ளிகள் திறக்கப்பட்டன. கல்விக்கண்ணைத் திறந்த அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அவருடைய ஒப்பற்ற பணிகளைப் பாராட்டும் வகையிலும் இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் பாடசாலை நிறுவிய அவருக்கு தமிழக பொதுமக்கள் கட்சி பேதமில்லாமல் அவருடைய பிறந்த நாளைக்கொண்டாடும் வகையில் அவரது திருவுருவப்படத்தினை  வைத்து  மாலையிட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் பல பகுதிகளில் அவருடைய பிறந்த நாளையொட்டி ஏழைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்டஉதவிகள் வழங்கி வருகின்றனர். 

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் கிராமத்தில் பெருந்தலைவர் காமராஜர்120 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் தெற்கு மாவட்டம் எல்லாபுரம் தெற்கு வட்டார காங்கிரஸ் சார்பில் எல்லாபுரம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் வெங்கட் டி. சிவசங்கரன் தலைமையில் வெங்கல் பஜார் பகுதியில் வைக்கப்பட்ட படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக புதிதாக திருவள்ளூர் தெற்கு மாவட்டத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வீராபுரம் தாஸ் கலந்து கொண்டு காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி கட்சி கொடி ஏற்றி வைத்து பொது மக்களுக்கு பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு பஜார் பகுதியில் உள்ள கடை வியாபாரிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர் இதில் காங்கிரஸ் மாநில இளைஞரணி செயலாளர் காங்கை குமார், திருவள்ளூர் வட்டார தலைவர் ஸ்ரீராமுலு, மாவட்டத் துணைத் தலைவர் ஆசிர்வாதம், மாவட்ட தொழிலாளர் சங்க தலைவர் வெளியூர் அன்பு திருவள்ளூர் ஒன்றிய தொழிலாளர் சங்க தலைவர் வின்சென்ட், வெங்கல் ஒன்றிய கவுன்சிலர் திருமலை சிவசங்கரன், தாமு நாயுடு, டாக்டர் ராமச்சந்திரன், பொன்னுரங்கம், மகாலிங்கம், ஓம் பிரசாத், தங்கப்பாண்டி நாடார், பொன்னுராஜ் நாடார், கோவிந்தா ஆச்சாரி, மனோகரன், பங்காரு நாயுடு, கமல், நாகா, அண்ணாமலை உள்ளிட்ட திரளான கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News