மாட்டுக்குகூட பயமிருக்கு... ஆனா, மனிதனுக்கு இல்லையே!
கரையான்சாவடியில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போது நாமும் ஊரடங்கை மீறிவிட்டோமா என்று பயந்து பயந்து மறைந்து சென்ற பசுமாடு.
கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. அதனால் விதிமுறைகளை மீறிச் செல்லும் வாகனங்களை போலீசார் தடுப்புகளை அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்தநிலையில் பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியில் விதிமுறைகளை மீறி சென்ற வாகனங்களை மடக்கி சோதனை செய்த போது, அந்த வழியாக சென்ற பசுமாடு ஒன்று, ஊரடங்கு மனிதருக்கு மட்டுமல்ல தங்களுக்கும் தானா என பயந்து அங்கிருந்து செல்ல முயன்றது.
ஆனால் போலீசார் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டதால், அந்த வழியாக செல்லாமல் மீண்டும் மீண்டும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதியில் போலீசாருக்கு பயந்து மறைந்து செல்வதுபோல சென்றது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அந்தப் பசுவை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.