முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

பூந்தமல்லி அருகே திருவேற்காட்டில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

Update: 2024-10-23 11:45 GMT

சோதனை நடத்தப்பட்ட முன்னாள் அமைச்சர்  வைத்திலிங்கத்தின் வீடு.

முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்திலிங்கம் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று அமலாக்கத்துறை சோதனையிட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தொகுதி, திருவேற்காடு கோ -ஆப்ரேட்டிவ் நகர், அண்ணம்மாள் தெருவில் உள்ள ஒரு வீட்டில் அமலாக்க துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். ஒரு காரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நான்கு பேர், சிஆர்பிஎப் போலீஸ் பாதுகாப்புடன் வந்து அந்த வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.

இந்த வீடு முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்திலிங்கம் எம்எல்ஏவுக்கு சொந்தமான ஸ்ரீராம் கன்ஸ்ட்ரக்ஷன் என்ற பெயரில் இயங்கி வரும் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான வீடு என்று கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சரான வைத்திலிங்கம் தற்போது ஒரத்தநாடு எம்எல்ஏவாக உள்ளார். இவர் அமைச்சராக இருந்த போது, ரூ.28 கோடி லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இந்த சோதனையில் அமலாக்கத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News