வாணியஞ்சத்திரம் ஸ்ரீ ஏகாத்தம்மன் ஆலய தீமிதி திருவிழா
எல்லாபுரம் ஒன்றியம் வாணியஞ்சத்திரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ ஏகாத்தம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வாணியஞ்சத்திரம் கிராமத்தில். அருள்மிகு ஸ்ரீ ஏகாத்தம்மன் ஆலயம் உள்ளது. இங்கு, 14.ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு கடந்த 6.ஆம் தேதி கணபதி ஹோமம் நவகிரக ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்றன.
பின்னர் காப்பு கட்டுதல் பெண்கள் பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 6.ஆம் தேதி முதல், நேற்று15.ஆம் வரை அம்மனுக்கு நாள்தோறும் பால் தயிர் இளநீர் 108 குங்குமார்ச்சனை உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வந்தது. இதனையடுத்து கிராமத்தைச் சேர்ந்த சுமார் 300 பக்தர்கள் கடந்த 6.ஆம்தேதி அன்று காப்பு கட்டி 10. நாட்கள் விரதம் இருந்து பக்தர்கள் கங்கைக்கரை என்ற இடத்தில் புனித நீராடினர்.
இதனையடுத்து பக்தர்களை அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில், ஒருவருக்கு ஒருவர் பின் தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து அம்மனை வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மிக சிறப்பாக செய்திருந்தனர்.