திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் துண்டு பிரசுரம் விநியோகம்
பொன்னேரியில் திமுக அரசின் சட்ட ஒழுங்கு சீர்குலைந்தது எனக் கூறி அதிமுக சார்பில் பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன் துண்டு பிரச்சாரங்களை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் சட்டம் ஒழுங்கு சீர்கேடு தமிழகத்தில் கள்ளச்சாராயம் மரணங்கள், வீதிக்கு வீதி கஞ்சா, தெருக்கு தெரு போதை மாத்திரை விற்பனை அதிகரித்துவருவது குறித்து பொன்னேரி நகராட்சியில் உள்ள பொதுமக்களுக்கும், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்கும், கடை வியாபாரிகளுக்கு நகர செயலாளர் செல்வகுமார் ஏற்பாட்டில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சிறுணியம் பலராமன் தலைமையில் துண்டு பிரசாரங்கள் வழங்கப்பட்டது.
அப்போது அரசின் ஆட்சியின் அவல நிலை குறித்து மக்கள் மத்தியில் எடுத்துரைக்கப்பட்டது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் ராஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.