பூந்தமல்லி அருகே பணம் பங்கு பிரிப்பதில் தகராறு: டாஸ்மாக் ஊழியர் அடித்து கொலை
திருவேற்காடு பகுதியில் டாஸ்மாக் ஊழியர்கள் இடையே பணம் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஊழியர் ஒருவர் அடித்து கொலை.;
திருவேற்காடு பகுதியில் டாஸ்மாக் ஊழியர்கள் இடையே பணம் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஊழியர் ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி திருவேற்காடு கோலடியில் பகுதியில் அரசு டாஸ்மாக் இயங்கி வருகிறது. இந்த கடையில் முனிராஜ், மற்றும் முனிச்செல்வம் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இதனையடுத்து டாஸ்மார்க் கடையில் பாட்டில் மீது கூடுதல் தொகை வைத்து விற்பனை செய்வது ஊழியர்களுக்கு வழக்கம். கூடுதலாக வரும் பணத்தை முறையாகப் பிரித்து அனைவரும் எடுத்து செல்வது வழக்கம்
இதேபோல் முனிராஜ் மற்றும் முனி செல்வத்திற்கு பணம் பங்கு பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் முனி செல்வம், முனிராஜை அடித்துக் கொலை செய்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முனி செல்வம் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பணம் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் சக ஊழியரை அடித்துக் கொன்றதை அப்பகுதியில் பதற்றமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.