பேருந்து நிலையத்தில் கட்டண கழிப்பிடத்தை ஆய்வு செய்த அமைச்சர்..!
பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள கட்டண கழிப்பிடத்தை இன்று ஆய்வு மேற்கொண்ட பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர்.;
பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள கட்டண கழிப்பிடத்தை இன்று ஆய்வு மேற்கொண்ட பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர்.
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் கட்டண கழிப்பிடத்தை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் ஆவடி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பால்வளத் துறை அமைச்சருமான ஆவடி சா.மு. நாசர். அவர்களுடன் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ. கிருஷ்ணசாமி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மற்றும் பூவிருந்தவல்லி நகராட்சியை சேர்ந்த அதிகாரிகள், பூந்தமல்லி திமுக பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.