கண்டெய்னர் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

மதுரவாயில் பைபாஸில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு.

Update: 2021-04-23 16:55 GMT

திருவள்ளூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து உடைகளுக்கு மாற்றப்படும் அங்கர் லோடு ஏற்றிக்கொண்டு வந்த கண்டெய்னர் லாரி ஒன்று சென்னை துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது. கண்டெய்னர் லாரியை முருகதாஸ் என்பவர் ஓட்டி வந்தார். பூந்தமல்லி நெடுஞ்சாலை வானகரம் அருகே மதுரையில் பைபாஸ் மீது ஏறும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் சாலையின் நடுவே கவிழ்ந்தது. இதில் டிரைவருக்கு லேசான ஏற்பட்டது. காயமடைந்த டிரைவர் முருகதாஸ் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக அந்த வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனையடுத்து ராட்சத கிரேன்கள் கொண்டுவரப்பட்டு பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த கண்டெய்னரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கன்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் வாகனத்திலிருந்து ஆயில் அதிக அளவில் சாலைகளில் கொட்டியதால் அந்த பகுதி சாலை முழுவதும் வழுக்கும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு மண்ணை கொட்டும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags:    

Similar News