தாமரைப்பாக்கத்தில் பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
142 நாடாளுமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்த பாஜக அரசை கண்டித்து தாமரைப்பாக்கத்தில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த 13-ம் தேதி நாடாளுமன்றத்தில் மர்ம நபர்களால் நடத்தப்பட்ட புகை குண்டு தாக்குதலை கண்டித்தும்,142 நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்த விவகாரத்தை கண்டித்தும்,பாஜக அரசின் சர்வாதிகாரப்போக்கை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வீராபுரம் தாஸ் தலைமை தாங்கினார். நாடாளுமன்றத்தில் பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளதாககூறியும், இதற்குக் காரணமான மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதில்,மாநில செயலாளர் ஆர்.ஆர்.சாந்தகுமார்,இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் காங்கை எம்.குமார்,எல்லாபுரம் தெற்கு வட்டார தலைவர் சிவசங்கரன்,ஒன்றியகவுன்சிலர் திருமலை,சோழவரம் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி மாவட்ட,ஒன்றிய,பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள்,அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.