மோட்டார்பைக்- லாரி மோதி விபத்து : பெண் பலி

Update: 2021-04-07 04:45 GMT

திருவள்ளூர் மாவட்டம் குமணன்சாவடி அருகே மோட்டார்பைக் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் இடல் புஷ்பா (32). போரூர் ராமாபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று மாலை 4 மணி அளவில் மோட்டார்பைக்கில் அவரது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திருவேற்காட்டை அடுத்த குமணன் சாவடி அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஜல்லி கற்கள் ஏற்றி வந்த லாரி அவரது வாகனம் மீது மோதியது.இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த புஷ்பா அந்த லாரியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது தொடர்பாக பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் லாரி ஓட்டுநர் டில்லிபாபு வை கைது செய்தனர்.

Tags:    

Similar News