திருவேற்காடு நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை

அடிப்படை வசதிகளை செய்து தராத திருவேற்காடு நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து முற்றுகையிட்டு மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-28 07:30 GMT

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அடுத்த திருவேற்காடு நகராட்சி பத்தாவது வார்டில் சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த வாரத்தில் உள்ள தேவி நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாயை, தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை எதுவும் செய்யப்படவில்லை என்றும், மேலும் அப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த கால்வாயில் சென்று வெளியேறுகிறது.

இந்த நிலையில் கால்வாயில் நீண்ட நாட்களாக தூர்வாராமல் இருப்பதால் கழிவுநீர் ஆனது தேங்கி சாலையில் பாய்வதோடும் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது.அவ்வழியை பயன்படுத்த முடியாமல் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகுவதாகவும், இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதனை அடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் 10.வது வார்டு திமுக கவுன்சிலரான நளினியின் கணவர் குருநாதன் தலைமையில் நேற்று திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதோடு நான்கு காலி குடங்களில் கழிவு நீரை கொண்டு வந்து நகராட்சி அலுவலக நுழைவு வாயிலில் ஊற்றி அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோஷமிட்டனர்.

இதனால் நகராட்சி வளாகம் முழுவதும் சாக்கடை கழிவு நீரால் துர்நாற்றம் வீசியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவேற்காடு போலீசார் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பொதுமக்களின் பிரதிநிதிகள் மற்றும் நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாட்ஷா சமரச பேச்சுவார்த்தை நடத்தினார் இதனை ஏற்க மறுத்த அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலக எதிரே உள்ள சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருவேற்காடு நகர மன்ற தலைவர் மூர்த்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் கழிவுநீர் கால்வாயை தூர்வாரி கழிவுநீர் சீராக செல்ல நடவடிக்கை எடுப்பதாகவும், தெரு விளக்குகள் உடனடியாக அமைத்து தரவும் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தருவதாக உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர் இந்தப் போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News