பூந்தமல்லி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து: உயிர் தப்பிய நால்வர்

பூந்தமல்லி அருகே மின்சார வயர்கள் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 4பேர் உயிர் தப்பினர்.

Update: 2024-09-29 08:45 GMT

கவிழ்ந்த காரை மீட்கும் பணி நடந்தது.

பூந்தமல்லி அருகே மின்சார வயர்கள் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் பவன். இவரது நண்பர் வெளிநாட்டில் இருந்து இன்று விமான மூலம் சென்னைக்கு வந்த நிலையில் அவரை அழைத்து செல்வதற்காக பவன் அவரது நண்பர்களுடன் சென்னை விமான நிலையத்திற்கு சென்றவர் வெளிநாட்டிலிருந்து வந்த தனது நண்பரை காரில் ஏற்றிக்கொண்டு ஆந்திரா நோக்கி காரில் நண்பர்களுடன் ஐந்து பேர் சென்று கொண்டிருந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், டிரங்க் சாலையில் சென்று கொண்டிருந்தபோது 400 கிலோ வாட் திறன் கொண்ட மின்சார வயர்கள் பூமிக்கு அடியில் பதிப்பதற்காக சாலை ஓரத்தில் பள்ளம் தோண்டப்பட்டு தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தது கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென தடுப்புகளை உடைத்துக் கொண்டு சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளத்தில் அப்படியே நிலைகுலைந்து கவிழ்ந்தது.


இதனை கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து பள்ளத்தில் கவிழ்ந்த காரில் இருந்தவர்களை மீட்டனர். இதில் எந்தவித காயமும் இன்றி நான்கு பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த காரை கிரேன் உதவியுடன் மீட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையோரத்தில் மின்சார வயர்கள் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்திற்காக வைக்கப்பட்டுள்ள தடுப்புகள் முறையாக இல்லாதது இந்த விபத்திற்கு காரணம் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்தனர். தற்போது இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News