நசரத்பேட்டையில் கஞ்சா கடத்தல்; சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்

சென்னையை அடுத்த, நசரத்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த 2 பேரை சினிமா பாணியில் விரட்டி சென்ற போலீசார் மடக்கி பிடித்தனர்.

Update: 2021-07-18 13:26 GMT

கஞ்சா கடத்தலில் கைதான இருவர்.

சென்னையை அடுத்த, வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் நசரத்பேட்டை அருகே பூந்தமல்லி போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், தலைமை காவலர் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதி கீழே விழுந்தனர்.

இதனையடுத்து, அங்கு பணியில் இருந்த போலீசார் அவர்களை தூக்கி விட்டு சென்றபோது போலீசாரை கண்டதும் 3 பேரும் அந்த வாகனத்தை எடுத்துக்கொண்டு ஓடினார்கள்.

அதில் ஒருவர் வாகனத்தின் இருக்கை அடியில் இருந்த ஒரு பொட்டலத்தை எடுத்து மற்றொரு நபருக்கு கொடுத்து ஓட சொன்னதை பார்த்ததும் போலீசார் விரட்டிச் சென்றனர். போலீசாரை கண்ட அவர்கள் தப்பி ஓட முயன்றபோது 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அதில் ஒருவர் தப்பி ஓடி விட்டார். அந்த நபர் வைத்திருந்த பார்சலை போலீசார் பிரித்து பார்த்தபோது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து நசரத்பேட்டை போலீசாரிடம் பிடிபட்டவர்களை போக்குவரத்து போலீசார் ஒப்படைத்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில்,பிடிபட்டவர்கள் ஐயப்பன்தாங்கலை சேர்ந்த சீனு, மாங்காட்டை சௌந்தரராஜன். இவர்கள் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. இவரிடமிருந்து 1 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News