மதுரவாயலில் பணியின் போது மின்சாரம் தாக்கி கேபிள் டிவி ஆபரேட்டர் பலி
மதுரவாயலில் பணியின் போது மின்சாரம் தாக்கி கேபிள் டிவி ஆபரேட்டர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
மதுரவாயலில் பணியின் போது மின்சாரம் தாக்கி கேபிள் டிவி ஆபரேட்டர் பலியானார்.
குன்றத்தூர் அடுத்த தண்டலம் எம்ஜிஆர் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார். இவர் தனியார் நிறுவனத்தில் கேபிள் டிவி ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இரவு வானகரம் செட்டியார் அகரம் அருகே பள்ளம் தோண்டி கேபிளை பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மேலே சென்று கொண்டிருந்த வயரில் இணைப்பு கொடுக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சார வயரில் கை பட்டதில் மின்சாரம் உடலில் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு மயங்கினார்.
இதையடுத்து அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ராஜேஷ்குமார் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த மதுரவாயல் போலீசார் இறந்து போன ராஜேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.