பூவிருந்தவல்லி அருகே 7வயது சிறுவன் ராபிஸ் பாதித்து உயிரிழப்பு

பூவிருந்தவல்லி அருகே அகரமேல் கிராமத்தில் 7 வயது சிறுவனை தெரு நாய் கடித்ததில் ராபிஸ் வைரஸ் பரவி உயிரிழந்தான்;

Update: 2021-08-22 04:07 GMT

பூவிருந்தவல்லி அருகே அகரமேல் கிராமத்தில் வசிக்கும்  7 வயது சிறுவன் மோனிஷ். இவனை  கடந்த மாதம் தெருநாய் ஒன்று கடித்துள்ளது. அவரது பெற்றோர் அதற்கு நாட்டு வைத்தியம் பார்த்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு சிறுவனுக்கு திடீரென நாயை போன்று நாக்கில் இருந்து எச்சில் ஊற்றியதாகவும், தண்ணீரை கண்டால் ஓடுவது உள்ளிட்ட ரேபீஸ் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டதால் சென்னை எக்மோர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். ஆனால், சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தான். ரேபீஸ் வைரஸ் பரவல் காரணமாக சிறுவனின் உடலை மாநகராட்சி அதிகாரிகள் பாதுகாப்புடன் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்து வருகின்றனர்

இந்த சம்பவத்தை அடுத்து சிறுவனின் பெற்றோர் மற்றும் சிறுவன் யாருடன் எல்லாம் பழகினார்கள் என கணக்கெடுத்து அவர்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி போடுவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

Tags:    

Similar News