இந்து முன்னணி அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்து தகர்த்த வழக்கு: 3 பேர் விடுதலை

சென்னை இந்து முன்னணி அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்து தகர்த்த வழக்கில் 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.;

Update: 2021-12-16 15:45 GMT

பூந்த மல்லி கோர்ட் வளாகம் ( பைல் படம்)

கடந்த 14.4.1995 அன்று முஸ்தபா ரசாதிக் என்பவர் சக்தி வாய்ந்த வெடிகுண்டு உள்ள பையை சிந்தாதிரிபேட்டையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் வைத்தார். குறிப்பிட்ட நேரத்தில் குண்டு வெடிக்காததால் மீண்டும் சென்று வெடிகுண்டு வைத்த பையை எடுக்கும் போது இந்து முன்னணி அலுவலகத்தில் உள்ளவர்கள் முஸ்தபா ரசாதிக்கை பிடிக்க முயற்சி செய்தனர்.

அப்போது முஸ்தபா ரசாதிக் அங்குள்ளவர்களை துப்பாக்கியை காட்டி  மிரட்டியதாகவும், இதனால் அனைவரும் சிதறி ஓடியதாகவும் உடனே முஸ்தபா ரசாதிக் வெடிகுண்டை அப்போதே வெடிக்க செய்தார். இதில் அவர் உடல் சிதறி இறந்து போனார்.

மேலும் இந்து முன்னணி அலுவலகமும் இடிந்து விழுந்தது. உள்ளே இருந்த இந்து முன்னனி பிரமுகர் பைபிள் சண்முகமும் இறந்து போனார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கை முதலில் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர் சென்னை மத்திய குற்றபிரிவு போலீசார் விசாரணை நடத்திய நிலையில் அதன் பிறகு டிஜிபி உத்தரவுப்படி சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்தனர். இதில் 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதில் முஸ்தபா ரசாதிக் சம்பவத்திலேயே இறந்து விட்டார். அபுபக்கர் சித்திக் என்பவர் தலைமறைவாகி விட்டார். இதுவரை போலீசாரால் பிடிக்க முடியாததால் அவர் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கபட்டுள்ளார்.

இதில் காஜா நிஜாமுதீன்(என்ற)உமர்(என்ற)குட்டியப்பா, ஜாகிர் உசேன்(என்ற) இஸ்மாயில், ஹனஸ்(என்ற)உஸ்மான் அலி, ராஜா உசேன்(என்ற)சைபுல்லா, ஆகிய 3 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன் மூன்று பேரும் விடுதலை என அறிவித்தார். அரசு தரப்பில் வக்கீல் விஜயராஜ் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் 75 சாட்சிகள், 177 ஆவணங்கள் மற்றும் 39 சான்று பொருட்கள் குறியீடு செய்யப்பட்டது.

காலை முதல் பரபரப்புடன் காணப்பட்ட நீதிமன்றம் வளாகம் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News