பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை
பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.;
பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் நடைபெறும் சாலை பணிகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் அரசு திட்ட வளர்ச்சி பணிகளை கண்காணிக்கவும் வட்டார வளர்ச்சி அலுவலகம் பூந்தமல்லி பகுதியில் இயங்கி வருகிறது.
இதனை அடுத்து இந்த ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல ஊராட்சிகளில் ஏழை எளிய மக்களை அரசு தேர்வு செய்து அவர்களுக்கு அரசு சார்பில் வீடு கட்டி தரப்படுகிறது. வீட்டுக்கு வீடுகளுக்கு அனுமதி வாங்கவும், காலி மனை வரைபட அனுமதி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளிடம் அனுமதி பெற செல்லும்போது அதிக அளவில் லஞ்சம் கேட்பதாக இதனால் ஏழை எளிய மக்கள் வீடு கட்ட முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து புகார்கள் வந்தன.
இந்த புகாரின் அடிப்படையில் சென்னை ஆலந்தூர் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி லவக்குமார் தலைமையில் கொண்ட பத்துக்கு மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் அலுவலகத்தில் பணி செய்து வரும் அரசு அலுவலர்களை அவரவர்கள் இடத்திலே அமரும்படி உத்தரவிட்டு அலுவலகத்தின் அனைத்து பகுதிகள் உள்ள கதவை ஜன்னல்களை மூடிவிட்டு தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த அலுவலகத்திற்குள் இருந்த நபரிடம் சோதனை செய்ததில் அவர்களிடம் இருந்து ரூ.1லட்சம் பறிமுதல் செய்ததோடு அலுவலகத்தில் பணி செய்யும் நபரிடமிருந்து கணக்கில் வராத ரூ.60 ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல் செய்ததோடு சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாகவே நடந்த இந்த சோதனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.