பூந்தமல்லி அருகே வாகனத்தில் கடத்திய குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல்..!

பூந்தமல்லி அருகே வாகன சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட ஒரு டன் குட்கா பொருள் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Update: 2024-06-13 03:45 GMT

கோப்பு படம் 

பூந்தமல்லி அருகே வாகனத்தில் எடுத்து வந்த ஒரு டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. சோதனையின் போது நிற்காமல் சென்ற வாகனத்தை விரட்டிச்  சென்று மடக்கிப்  பிடித்த போக்குவரத்து போலீசார்.

திருவள்ளூர் மாவட்டம் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலை நசரத்பேட்டையில் பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்ய போலீசார் மடக்கியபோது போலீசாரை கண்டதும் அந்த வாகனம் நிற்காமல் வேகமாக சென்றது. சந்தேகமடைந்த போக்குவரத்து போலீசார் அந்த வாகனத்தை பின் தொடர்ந்து நீண்ட தூரம் விரட்டி சென்ற நிலையில் நிற்காமல் சென்ற வாகனம் நசரத்பேட்டை சிக்னலில் நின்று கொண்டிருந்த இரண்டு வாகனங்களை இடித்துவிட்டு நின்றது.

போலீசார் பின்னால் வருவதை கண்டதும் வாகனத்தை ஓட்டி வந்த நபர் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.சந்தேகத்தின் பேரில் போலீசார் வாகனத்தை திறந்து பார்த்த போது அதில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் ஒரு டன் குட்கா போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசாரிடம் குட்கா பிடிபட்ட வாகனத்தை ஒப்படைத்தனர்.மேலும் வழக்கு பதிவு செய்து குட்காவை கடத்தி வந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News