உடற்பயிற்சி கூடங்கள் மூடல் :4 லட்சம் பேர் தவிப்பு

தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டதால் 4 லட்சம் பேர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் சங்கத்தினர் தகவல் தெரிவித்தனர் ; 50 சதவீத நபர்களுக்கு பயிற்சி அளிக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கையையும் விடுத்தனர்..;

Update: 2021-05-04 12:00 GMT
உடற்பயிற்சி கூடங்கள் மூடல் :4 லட்சம் பேர் தவிப்பு
  • whatsapp icon

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் அதை கட்டுப்படுத்தும் வகையில் உடற்பயிற்சி கூடங்கள் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் உடற்பயிற்சி கூடத்தை நம்பியுள்ள 4 லட்சம் பேர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.இது குறித்து பூவிருந்தவல்லியில் செய்தியாளர்களை சந்தித்த உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் சங்கத்தினர்:-

கொரோனா பரவல் காரணமாக உடற்பயிற்சி மூடப்பட்டதால் 7 ஆயிரத்திற்கும் மேல் உடற்பயிற்சி கூடங்கள் மூடபட்டு, அதனை நம்பியுள்ள 4 லட்சம் பேர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக தெரிவித்தனர்.


உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டாலும் வருமானமின்றி மின் கட்டணம், வாடகை தந்து வருவதாகவும்,உடற்பயிற்சி செய்வதால் உடலில் எதிர்ப்பு சக்தி கூடும். எனவே அரசு நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவீத நபர்களுக்காவது உடற்பயிற்சி அளிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News