பூவிருந்தவல்லியில் 4 கோடியில் அவசர சிகிச்சை மருத்துவமனை: எம்எல்ஏ அடிக்கல்
பூவிருந்தவல்லி அருகே 4 கோடி மதிப்பில் அவசர சிகிச்சை மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவக்கம்;
தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் பூவிருந்தவல்லி அருகே 4 கோடி மதிப்பில் அவசர சிகிச்சை மருத்துவமனைக்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடக்கம்.
அண்மையில் மத்திய போக்குவரத்து துறை வெளியிட்ட தேசிய அளவில் அதிக விபத்துக்கள் ஏற்படும் பகுதி என சென்னை அருகே நசரத்பேட்டை குறிப்பிட்டிருந்தனர் இங்கு விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகளை மீட்டு அவசர சிகிச்சைக்காக சென்னை அழைத்து செல்ல வேண்டி சூழல் இருக்கின்றது இதனால் பலர் உயிரிழப்பு ஏற்படும் சிரமம் இருந்தது இதனை தவிர்க்க சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் TAEI எனப்படும் தமிழக அரசின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை திட்டத்தின் கீழ் பூவிருந்தவல்லி அடுத்த திருமழிசையில் ரூ.4.00 கோடி மதிப்பீட்டில் சுமார் 3 1/2 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய இருக்கிறது.
இந்த மருத்துவமனை கட்டடம் தரைத்தளம் மற்றும் முதல் தளங்களாக வடிவமைக்கப்பட்டு தலா 6900 சதுரஅடிகள் வீதம் மொத்தம் 13800 சதுர அடி பரப்பில் பொதுப்பணித்துறையால் கட்டப்பட இருக்கிறது.இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.இதில் பூவிருந்தவல்லி எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
அப்போது பேசிய அவர்,இந்த மருத்துவ மனையில் புறநோயாளிகள் பிரிவு, இரண்டு நவீன அறுவை சிகிச்சை அரங்குகள், தலா 20 படுக்கைகள் கொண்ட விபத்து பரிசோதனை அறைகள் மற்றும் விபத்து சிகிச்சை வார்டுகள், மருத்துவர் மற்றும் செவிலியர் அறைகள் அமைய இருக்கிறது என்றார்.மேலும் நோயாளிகளும் அவர்களுடன் வருபவர்களும் சிரமமின்றி சிகிச்சை பெற்றிட தேவையான மின்தூக்கி வசதி, சாய்தள நடைபாதை வசதி, குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதிகளுடன் கட்டப்பட இருக்கிறது என்றும்
இந்த மருத்துவமனை தேசிய நெடுஞ்சாலை 45-க்கு அருகில் அமைய உள்ளதால் இது செயல்பாட்டிற்கு வரும்போது பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வேலூர் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் விபத்தில் சிக்கியுள்ளோர் உடனடியாக சிகிச்சை பெற பேருதவியாக இருக்கும் என தெரிவித்தார்.இதில் திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தேசிங்கு, திருமழிசை பேருராட்சி முன்னாள் தலைவர் முனுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்
.