நாய் கடித்து 11 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதி
பூந்தமல்லி அருகே மாங்காட்டில் வீட்டின் அருகே விளையாடு கொண்டிருந்த சிறுவனை வளர்ப்பு நாய் கடித்து குதறியதில் காயம் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிமதிக்கப்பட்டுள்ளார்.
பூந்தமல்லி மாங்காடு அடுத்த பொழுமணிவாக்கம் சார்லஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ் இவரது மனைவி எலிசபெத் இவர்களுக்கு துஜேஷ்( வயது 11), என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
நேற்று வீட்டின் வெளியே துஜேஷ் சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டின் எதிரே வசியக்கூடிய கார்த்திக் என்பவர் அவரது வீட்டில் வளர்க்கக்கூடிய ராட்வீலர் என்னும் நாயை நடை பயிற்சிக்கு அழைத்துச் சென்ற நிலையில் திடீரென வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுவர்களை பார்த்து அந்த நாய் எகிறியதால் அருகில் இருந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதில் அந்த நாய் விளையாடி கொண்டிருந்த துஜேசை கடித்ததில் அவரது தொடையில் பலத்த காயம் ஏற்பட்டு சிறுவன் ரத்த வெள்ளத்தில் அலறினார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த நாயை இழுத்து பிடித்த நிலையில் காயம் அடைந்த சிறுவனை பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறான். இந்த சம்பவம் குறித்து சிறுவனின் பெற்றோர் நாயின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் மாங்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் கடந்த சில மாதங்களாக சாலையில் நடந்து செல்பவர்கள் மீது மாடு முட்டுவதும் நாய் கடித்து குதறுவதும் அரங்கேறி வரும் நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் வீட்டில் வளர்க்கக்கூடிய நாய்களுக்கு உரிய அனுமதி வாங்க வேண்டும் என அறிவித்துள்ளது. ஆனால் தற்போது இந்த பகுதியில் வளர்க்கக்கூடிய நாய்களுக்கு முறையான அனுமதி பெறாமல் வீட்டில் வளர்த்து வருவதாகவும் சிறுவர்கள் விளையாடக்கூடிய நேரத்தில் தெருவில் நாய்களை அழைத்துச் செல்வதால் மேலும் பல அசம்பாவிதம் நடைபெறும் எனவும் எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வீட்டில் வளர்த்த நாய் சிறுவனை கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.