காட்டுப்பாக்கம்: சென்னீர் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கைவரிசை கொள்ளையர்கள் 4 பேர் கைது
பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், சென்னீர் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கைவரிசை கொள்ளையர்கள் 4 பேர் கைது.;
சென்னை புறநகர் பகுதியான பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், சென்னீர் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து பூந்தமல்லி போலீசார் தனிப்படை அமைத்து அப்பகுதிகளில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் பூந்தமல்லி பகுதியில் தொடர்ந்து கைவரிசை காட்டிய காட்டுபக்கத்தைச் சேர்ந்த அருண்குமார், ஹேமநாதன், லோகேஷ், ராஜா ஆகிய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்கள் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டடதை ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் இருந்து 11 பவுன் நகைை, 400 கிராம் வெள்ளி பொருட்கள், 10 கிலோ பித்தளை பொருட்கள், டிவி, 2 லேப்டாப், 15 கிலோ எடையுள்ள குத்துவிளக்கு பறிமுதல் செய்யப்பட்டது. பிடிக்கப்பட்ட 4 பேரும் மீண்டும் ஒரு வீட்டில் கொள்ளையில் ஈடுபட சதித்திட்டம் தீட்டியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.