அரசு மருத்துவமனையில் ஆட்சியருடன் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்.

பூந்தமல்லி அரசு மருத்துவமனை..;

Update: 2021-05-12 11:32 GMT

பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட ஆவடி சா.மு. நாசர்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  ஆணைக்கிணங்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் இணைந்து பூந்தமல்லி, ஆவடி, திருவள்ளூர் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா நோயாளிகளுக்கான சிறப்பு பகுதி படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் பூந்தமல்லி சட்டமன்ற வேட்பாளர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ மற்றும் மருத்துவ குழுவினர் ஆகியோர் உடனிருந்தனர்

Tags:    

Similar News