சிறுவாபுரி முருகன் கோயில் குளத்தில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு
சிறுவாபுரி முருகன் கோயில் குளத்தில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம் சிறுவாபுரி பகுதியைச் சேர்ந்த பிரியங்கா என்பவருக்கும் சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் 36 இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். ஸ்டாலின் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் விடுமுறை நாளில் சிறுவாபுரி கிராமத்திலுளள மாமனார் வீட்டிற்கு குடும்பத்துடன் வந்துள்ளார். அப்போது கோயில் குளக்கரை மீது நடந்து சென்ற அவர் நிலைதடுமாறி குளத்தில் தவறி விழுந்தார். தற்போது சிறுவாபுரி முருகன் கோவில் கும்பாபிஷேக பணிக்காக வேகமாக நடைபெறும் நிலையில் கோவிலுக்கு சொந்தமான குளம் தூர்வாரப்பட்டு தண்ணீர் நிரம்பி உள்ளதால் அவர் விழுந்தவுடன் சேற்றில் சிக்கிக் உள்ளே மூழ்கிவிட்டார்.
இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆரணி போலீசார் அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு ஏற்கனவே இறந்து வட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சடலத்தை பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.