பைல் படம்
மீஞ்சூர் அருகே கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மீஞ்சூர் அடுத்த தத்தை மஞ்சி கிராமத்தில் பெருமாள் கோவில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ஏழுமலை, இவரது மகள் சபரி யம்மாள் (24) இவருக்கு காட்டூர் கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் குமார்(28). என்பவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகிய நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை சபரியம்மாள் அருகே உள்ள கோவிலுக்கு கணவன் ரஞ்சித் குமாரிடம் கோவிலுக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுள்ளார். கோவிலுக்கு கூட்டிச் செல்ல மறுத்துவிட்ட ரஞ்சித் குமார் பின்னர் சபரியம்மாள் தனியாக சென்று பின்னர் வீட்டிற்கு வந்துள்ளார். உள்ளே சென்று தாழபாள் போட்டுக் கொண்டு அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராத சபரியம்மாள் சந்தேகமடைந்த உறவினர்கள் அக்கம் பக்கத்தினர். ஜன்னல் வழியாக பார்த்தபோது தூக்கில் தூங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து. கதவை உடைத்து அவரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து காட்டூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது குறித்து துணை ஆட்சியர் விசாரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. திருமணம் ஆகி 3 ஆண்டுகளில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.