பொன்னேரி அருகே இரும்பு ராடால் அடித்து மனைவி கொலை: கணவர் கைது

பொன்னேரி அருகே இரும்பு ராடால் அடித்து மனைவியை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-04-21 09:12 GMT

கொலை நடந்த வீட்டில் போலீசார் விசாரணை நடத்தினர்.

பொன்னேரி அருகே இரவு உணவு கொடுக்காத ஆத்திரத்தில் இரும்பு ராடால் மனைவியை அடித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மடிமை கண்டிகையை சேர்ந்த தம்பதியர் ரவி (65) - ஜோதி (50). செவித்திறன் மற்றும் பேச்சுத் திறன் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளியான ரவி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது. நேற்று இரவு ரவி தனது மனைவி ஜோதியிடம் இரவு உணவு கேட்ட போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி ஜோதி ரவிக்கு உணவு கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் தகராறு வாக்குவாதம் ஏற்பட்டு மனைவி ஜோதி தனது கணவர் ரவியை கன்னத்தில் அடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரத்தில் இருந்த ரவி நள்ளிரவு தனது மனைவி தூங்கிக் கொண்டிருந்தபோது இரும்பு ராடு எடுத்து ஜோதி தலையில் பலமாக தாக்கியுள்ளார். ரத்த வெள்ளத்தில் ஜோதியின் அலறல் சத்தம் கேட்டு அவரது மகன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே ஜோதி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஜோதியின் சடலத்தை கைப்பற்றிய பொன்னேரி காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள சவகிடங்கில் வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பொன்னேரி காவல்துறையினர் மாற்றுத்திறனாளி கணவர் ரவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு உணவு கொடுக்காத ஆத்திரத்தில் தனது மனைவியின் தலையில் இரும்பு ராடால் கணவர் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News