திருவள்ளூர் அருகே விச்சூர் செல்லியம்மன் கோயில் சந்திப்பு உற்சவம்

திருவள்ளூர் அருகே விச்சூர் செல்லியம்மன் கோயில் சந்திப்பு உற்சவம் மிக சிறப்பாக நடந்தது.

Update: 2022-05-18 01:59 GMT

திருவள்ளூர் அருகே விச்சூர் கிராமத்தில் கோவில் விழா சிறப்பாக நடந்தது.

திருவள்ளூர்மாவட்டம்பொன்னேரி தாலுகா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது விச்சூர் முதல் நிலை ஊராட்சி.இந்த ஊரா ட்சியில் உள்ள கிராமத்தில் கோயில் கொண்டுள்ள அகிலாண்ட கிராம தேவதை ஸ்ரீ செல்லியம்மன் ஸ்ரீ உலகமாதா அண்ணமாரப்பர் சுவாமிகளுக்கு சந்திப்பு உற் சவம் நேற்று மாலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் விச்சூர் சங்கர் தலைமை தாங்கினார்.விச்சூர்,வெள்ளி வாயல் ஒன்றிய கவுன்சிலர் ஷகிலா சகாதேவன்,ஊராட்சிமன்ற துணைத்தலைவர் வைதேகி சுமன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஊராட்சி மன்ற உறுப் பினர்கள் சதீஷ், தமிழரசு, ஜெனி பர்ராஜன்,மேகலாமுத்து, சிவபூஷ ணம்,சத்யா உதயகுமார், சுகந்தி ராஜ்,டில்லி கிருஷ்ணன்,ஆகியோர் வரவேற்றனர்.

இதனையடுத்து கடந்த 13 ந்தேதி யிலிருந்துசெல்லியம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடை பெற்றன பின்னர் நேற்று காலை 11 மணிக்கு செல்லி யம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது மாலை 5 மணிக்கு விச்சூர் கிராமத்தில் உற்றுங்குழி குளக்கரையில் ஸ்ரீ உலகமாதா ஸ்ரீ அண்ணமாரப்பர் குமார மக்களு க்கு புஷ்ப அலங்காரம் செய்து பக்தர்கள் புடைசூழ மேளதாளத்து டன் தூப தீப ஆராதனைகளுடன் ஊற்றும் நீரை தெரிவித்துக்கொ ண்டனர்.பின்னர் இரவு 9 மணி அளவில் புறப்பட்டு அண்ணமாரப் பர் கோயிலை அடைந்து மகா கற்பூர தீச்சட்டி ஏந்திகோயிலை சுற்றி வந்தது.

பின்னர் இரவு11 மணியளவில் கிராமத்தின் சார்பாக ஸ்ரீ உலகமா தா அண்ணமாரப்பருக்கு விச்சூர் கிராமத்தின் சார்பாக அலங்காரம் மேளதாளத்துடன் சந்திப்பு உற்சவ ம் நடைபெற்று மக்கள் புடைசூழ கிராமத்தில் பவனி வந்து திருக் கோயிலை அடைந்தது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விச்சூர் அனைத்து கிராம நிர்வாக மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சமூக இடைவெளியு டன் முககவசம் அணிந்தவாறு விழாவில் பங்கேற்றனர்.

Tags:    

Similar News