சோழவரம் ஒன்றியத்தில் அதிமுக சார்பில் நீர்,மோர் பந்தல்

சோழவரம் ஒன்றியத்தில் அதிமுக சார்பில் நீர்,மோர் பந்தலை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பலராமன் திறந்து வைத்தார்.;

Update: 2023-04-09 10:30 GMT

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் சோழவாரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தலை திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன் திறந்து வைத்து நீர்,மோர் தர்பூசணி, குளிர் பானம் உள்ளிட்டவை வழங்கினார்.

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் உத்தரவின் படி திருவள்ளூர் வடக்கு மாவட்டம் அதிமுக சார்பில் சோழவரம் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது

ஒன்றிய செயலாளர் பிரகாஷ் ஏற்பாட்டில் ஜனபசத்திரம் , தச்சூர் கூட்டு சாலை , ஆண்டார்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பந்தலை திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்த்தார்.

அப்போது பொது மக்களுக்கு இளநீர், மோர், தர்பூசனி, உள்ளிட்டவற்றை வழங்கினார். முன்னதாக பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகர செயலாளர் செல்வகுமார் ஏற்பாட்டில் குடிநீர் பந்தலையும் அவர் திறந்து வைத்து பொது மக்களுக்கு வழங்கினார்

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் ராஜா, மாநில எம் ஜி ஆர் மன்ற துணைச் செயலாளர் பஞ்செட்டி நடராஜன், மாவட்ட அவைத் தலைவர் பொன்னுதுரை, பொன்னேரி நகர் மன்ற துணைத் தலைவர் விஜயகுமார், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குமார், சோழவரம் பிரகாஷ், பொன்னேரி நகர செயலாளர் செல்வகுமார், மாணவர் அணி செயலாளர் ஸ்ரீதர், விவசாய பிரிவு ரவிச்சந்திரன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் சுதாகர், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News