பொன்னேரி அருகே 100 நாள் வேலை கேட்டு கிராம பொது மக்கள் போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே 100 நாள் வேலை கேட்டு கிராம பொது மக்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-07-14 06:00 GMT

பொன்னேரி அருகே ஞாயிறு ஊராட்சியில் கிராம மக்கள் நூறு நாள் வேலை கேட்டு போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஞாயிறு ஊராட்சியில் சுமார் 3500-க்கும் மேற்பட்ட பொது மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சிக்குட்பட்ட கண்ணியம்பாளையம் கிராமத்தில் உள்ள மக்களுக்கு சுமார் 4 மாத காலமாக 100.நாட்கள் வேலை வழங்கவில்லை என்றும் பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முறையிட்டும் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்தும் இதுவரை எவ்விதமான எந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அப்பகுதி மக்கள் இந்த 100 நாள் வேலைளை நம்பி தான் பிழைப்பு நடத்துகின்றனர்.

இந் நிலையில் ஆத்திரமடைந்த 200-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ஜனார்த்தனன் தலைமையில் கிராம நிர்வாக அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டும் பின்னர் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.இதணைத்தொடர்ந்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர் அமிழ்தமன்னன் மற்றும் சோழவரம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அப்பகுதி மக்கள் கூறுகையில் எங்கள் பகுதியில் 100 நாள் வேலை வழங்காமல் அலைகழிப்பதாகும். தங்கள் பகுதிக்கு சுடுகாடு வசதி இல்லை என்றும் ரேஷன் பொருட்களை வாங்க சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்குவதாகவும் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்தனர்.

இதற்கு பதிலளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் நாளை முதல் 100 நாள் வேலை வழங்குவதாகவும் அடிப்படை வசதிகளை தகுந்த அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி நடவடிக்கை எடுப்பதாக என. கூறி உறுதியளித்தனில் பேரில் அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News