வெங்கல்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

வெங்கல் பகுதியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2021-06-11 15:01 GMT

திருவள்ளூர் வெங்கல் பகுதியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் பெட்ரோல் பங்க் அருகே காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், மாவட்ட தலைவர்கள் சிதம்பரம், லயன் ரமேஷ் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி மத்திய அரசை கண்டித்தும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் எல்லாபுரம் தெற்கு வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தெற்கு வட்டார காங்கிரஸ் கட்சியின் தலைவர் வெங்கல் சிவசங்கர் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் திருமலை சிவசங்கர் முன்னிலை வகித்தார். காங்கிரஸ் மாநில மனித உரிமை கழக இணைச் செயலாளர் காங்கை குமார் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

இதில் எஸ். கார்த்திக், கே. மகாலிங்கம், பொன்னுரங்கம், பங்காரு நாயுடு, ஒன்றிய மகளிர் அணி லைலா மணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News