வெங்கல் அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது; ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்
வெங்கல் அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.;
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை அடுத்துள்ள வெங்கல் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் வெங்கல் அருகே அமைந்துள்ள வானம் சத்திரம் பகுதியில் வீட்டின் பின்புறம் கஞ்சா மறைத்து வைத்து விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது 3 பேர் கஞ்சாவை பொட்டலங்கலாக மடித்துக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் ஓட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்து அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 3 பேரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.