வேலூர் அருகே கத்தியை காட்டி பணம், கைகடிகாரம் பறிப்பு
வேலூர் அருகே கத்தியை காட்டி பணம் , கைகடிகாரத்தை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.;
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காணியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (28) என்பவர் வீட்டில் இருந்து சுமார் 4 மணி அளவில் வேலூர் கோழிப் பண்ணை அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது வரும் வழியில் திருவெள்ளவாயலில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் மகேந்திரனை வழிமறித்து தகாத வார்த்தையால் பேசியுள்ளனர்.
பின்பு கழுத்தில் கத்தியை வைத்து பணம், கைகடிகாரம் உள்ளிட்டவை திருடிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து காட்டூர் காவல் நிலையத்தில் புகார் மகேந்திரன் புகார் அளித்தார்,. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.