பழவேற்காடு ஏரியில் குளித்த இரண்டு வாலிபர்கள், நீரில் மூழ்கி பலி

Dead News -பொன்னேரி அருகே பழவேற்காடு ஏரியில் குளித்த மூன்று பேரில், இரண்டு வாலிபர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.;

Update: 2022-10-26 02:00 GMT

நீரில் மூழ்கி இரண்டு வாலிபர்கள் பலியாகினர்.

Dead News -திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஏரியில் கடந்த 2011-ம் ஆண்டு, பொங்கல் பண்டிகை முன்னிட்டு காணும் பொங்கல் அன்று படகு சவாரி நடந்தது. இதில் சுற்றுலா வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 22 பேர் படகு கவிழ்ந்து, ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, பழவேற்காடு ஏரியில் படகு சவாரி செல்ல திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகை அன்று சென்னை திரிசூலத்தை பகுதியை சேர்ந்த 10 பேர், பழவேற்காடுக்கு சுற்றுலா வந்து தடை செய்யப்பட்ட பகுதியில் படகு சவாரி சென்றனர். அங்கு முகத்துவாரம் அருகே ஏரியில் குளித்துக் கொண்டிருந்தபோது மதன் குமார், அருண் குமார், எபிநேசர் ஆகிய 3 பேர் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போனார்கள்.

அவர்களுடன் வந்த மற்றவர்கள், நீண்ட நேரம் ஆகியும் மூன்று பேரும் வெளியே வராத காரணத்தினால் அதிர்ச்சடைந்து கூச்சலிட்டனர். இதனை அறிந்த அருகில், அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள், நீரில் மூழ்கியவர்களை தேடிய போது இரு வாலிபர்கள் மீட்கப்பட்டனர். அதில் மதன் குமார் உயிரிழந்த நிலையில் சடலமாக  மீட்டனர். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அங்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் பொன்னேரி தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கிய நபர்களை தேடினர். இதில் எபிநேசர் என்ற வாலிபரை உயிருடன் மீட்டனர் பின்னர் அவருக்கு பழவேற்காடு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே நீரில் மூழ்கி காணாமல் போன அருண்குமாரை தேடி வந்த நிலையில் அருண் குமார் சடலம் முகத்துவாரம் அருகே கண்டெடுக்கப்பட்டது. பின்னர் அருண்குமார், மதன்குமார் ஆகிய இரண்டு பேரின் சடலங்களை  பொன்னேரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட பகுதியில், படகு சவாரி சென்று நீரில் மூழ்கி 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுபோன்ற அசம்பாவிதங்கள் தொடராமல் தடுக்க, பழவேற்காடு ஏரியில் குளிக்கவும், படகு சவாரி செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆனால் தடையை பொருட்படுத்தாமல், தடை  மீறி சிலர் இதுபோன்ற ஆபத்துகளில் சிக்கிக் கொண்டு உயிரிழந்து வருகின்றனர். இதுபோன்ற அசம்பாவிதம் தொடராதபடி தடுக்க, தடை செய்யப்பட்ட பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அளித்து, போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். 'குளிக்கவும், படகு சவாரி செல்லவும் தடை செய்யப்பட்ட பகுதி' என்பதற்கான அறிவிப்பு பலகைகளும் வைக்க வேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News