பெரியபாளையம் அருகே கஞ்சா கடத்திய இருவர் கைது
பெரியபாளையம் அருகே சின்னம்பேடு பகுதியில் கஞ்சா கடத்தி வந்த இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி சோழவரம் ஒன்றியம் சின்னம்பேடு பகுதியில் ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து கஞ்சா விற்பனை செய்வதாக பெரியபாளையம் மதுவிலக்கு அமலாக்கு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இத்தகவலின் பெயரில் போலீசார் சின்னம்பேடு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கி சோதனை செய்ததில் அவர்களிடம்1.கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதனை அடுத்து கஞ்சாவை மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் கடத்தி வந்த பெரியபாளையம் அருகே கிளாம்பாக்கம் கிராமம் பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த அஜித் குமார் (வயது 28), தினேஷ் (வயது 23). ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு பின்னர் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.