நெய்தவாயல் அருகே லாரி டிரைவர் அரிவாளால் வெட்டிக்கொலை; போலீசார் விசாரணை

நெய்தவாயல் அருகே லாரி டிரைவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2021-08-31 14:23 GMT

பைல் படம்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த நெய்தவாயில் பகுதியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநரான ஹேமநாதன் (எ) பாண்டிதுரை. இவர் இன்று, தம்முடைய வீட்டிலிருந்து நெய்தவாயல் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவரை வழிமறித்த 4பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினர்.

ஹேமநாதனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைத்துள்ளனர். லாரி ஓட்டுநரான ஹேமநாதனுக்கு தொழில் போட்டி உள்ளதா அல்லது வேறு ஏதாவது முன்பகை காரணமா என்பது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News