திருவள்ளூர்: தடபெரும்பக்கம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம்!
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் தடபெரும்பக்கம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.;
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட தடபெரும்பக்கம் ஊராட்சியில் மீஞ்சூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு இலவச கொரொனா தடுப்பூசி செலுத்துவதற்கான முகாம் நடைபெற்றது.
இதில் பொன்னேரி கோட்டாட்சியர் செல்வம், ஆய்வாளர் மார்ட்டின், ஊராட்சி மன்ற தலைவர் பாபு, துணைத் தலைவர் சவிதா பாபு, மாவட்ட பேரமைப்பு தலைவர் நந்தன், ஈஸ்வரி ராஜா, வார்டு உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களும், பெண்களும் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.