திருவள்ளூர்: டூவீலர் பழுதுநீக்க கடை மதியம் வரை திறந்திருக்க கோரிக்கை
இருசக்கர வாகனம் பழுது பார்ப்போருக்கு மதியம் 1 மணிவரை கடை திறக்கவும் நிவாரணம் வழங்கவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.;
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளார் வரிசையில் இருசக்கர வாகனம் பழுது பார்ப்போரும் உள்ளனர். அவசிய தேவைக்காக மட்டும் வாகனங்கள் இயங்கி வரும் நிலையில் அத்தியாவசிய, அவசர தேவைகளுக்காக இருசக்கர வாகனங்கள் மட்டும் தற்போது பொது மக்களின் போக்குவரத்துத்திற்கு பயன்படுகின்றது.
வாகனம் பழுதடைந்துவிட்டால் பணிக்கோ, கடைகளுக்கோ செல்ல முடியாத சூழலில் அதனை சரி செய்து கொடுக்கும் பொறுப்பு இருசக்கர வாகன பழுது பார்ப்போரிடமே உள்ளது. அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தையும் மூடி உள்ள நிலையில் பொதுமக்கள் சென்று வர பயன்படும் இருசக்கர வாகனங்கள் பழுதடையும் போது அது சரி செய்யப்படாமல் பல்வேறு இன்னல்களுக்கு பொதுமக்கள் ஆளாகின்றனர்.
மேலும் இருசக்கர வாகன தொழிலை நம்பி ஏராளமான குடும்பங்கள் இருக்கின்ற காரணத்தினால், இதனை உடனடியாக திறக்க வேண்டுமெனவும் திருவள்ளூர் மாவட்ட இரு சக்கர வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கம் சார்பில் பகல் 1 மணிவரை கடை திறக்கவும் அல்லது ஊரடங்கு காலம்வரை தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இச்சங்கத்தின் பொறுப்பாளர் சாயின்ஷா மற்றும் நிர்வாகிகள் அரசுக்கு கோரிக்கையாக தெரிவித்தனர்.