திருவள்ளூர்: கும்மனூரில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்- விற்பனை செய்தவர் கைது!

கும்மனூர் வெளி வட்டச் சாலையில் கஞ்சா விற்ற நபர் கைது; 1 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல்.;

Update: 2021-05-25 07:09 GMT

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த கும்மனூர் வெளி வட்டச் சாலையில் 144 தடை உத்தரவை கண்காணிக்க சோழவரம் உதவி ஆய்வாளர் மகாலிங்கம் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

கும்மனூர் சர்வீஸ் சாலையில் உள்ள முட்புதரில் மறைவாக கையில் பையுடன் நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், அரசால் தடை செய்யப்பட்ட போதை தரக்கூடிய 1 கிலோ 700 கிராம் எடை கொண்ட கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்ததாகவும், மேலும் அவரை விசாரணை செய்ததில் எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்த பார்த்திபன் என தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News