திருவள்ளூர்: காட்டூர் ஏரி நீர்த்தேக்க பணிகள்- துரை சந்திரசேகர் எம்எல்ஏ நேரில் ஆய்வு! '

காட்டூர் ஏரி நீர்த்தேக்க பணிகளை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

Update: 2021-06-12 14:31 GMT

காட்டூர் ஏரி நீர்த்தேக்க பணிகளை பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர் நேரில் ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே 615 ஏக்கர் பரப்பளவில் உள்ள காட்டூர், தத்தமஞ்சி ஏரிகளை இணைத்து 62.36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீர்த்தேக்கம் அமைப்பதற்கான பணிகள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

58 மில்லியன் கன அடி கொள்ளளவு நீரைத் தேக்கி வைக்கும் நிலையிலுள்ள ஏரிகளில் 350 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிகளை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் திமுக நிர்வாகிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பணிகள் குறித்து பொது னபணித்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தகாரர்கள், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினரிடம் விளக்கினார்.

இதனையடுத்து நீர்த்தேக்க பணிகளை முறைகேடு புகார்கள் ஏதும் இன்றி முழுமையாக மேற்கொள்ளுமாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் அறிவுறுத்தினார். 

உடன் மீஞ்சூர் ஒன்றிய தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி, மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ், காங்கிரஸ் நிர்வாகிகள், மீஞ்சூர் வட்டார தலைவர் ஜலந்திரன், கொண்டகரை ஜெயபிரகாஷ், காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வ ராமன், தத்தமஞ்சி ஊராட்சி மன்ற தலைவர் செல்வி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்ணன், சங்கர், சக்தி மற்றும் கட்சி நிர்வாகிகளும் அதிகாரிகளும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News