திருவள்ளுர்: ஜெகநாதபுரம் கிராமத்தில் வேளாண்துறையின் இலவச கோடை உழவு திட்டம்!

திருவள்ளூர் மாவட்டம் ஜெகநாதபுரம் கிராமத்தில் வேளாண் துறை சார்பில் இலவசமாக உழவு செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது.

Update: 2021-06-12 04:51 GMT
ஜெகன்நாதபுரம் கிராமத்தில் தொடங்கப்பட்ட கோடை உழவு திட்டத்தில் விவசாயிகள் பணியாற்றுகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வருமானமின்றி உள்ள சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் துறை சார்பில் இலவசமாக கோடை உழவு செய்யும் திட்டம் சோழவரம் ஜெகநாதபுரம் கிராமத்தில் தொடங்கப்பட்டது.

2 ஏக்கருக்கும் குறைவாக உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண்துறை மற்றும் டாபே டிராக்டர் நிறுவனம் சார்பில் இலவசமாக உழவு செய்து கொடுக்கும் திட்டத்தை துவக்கி வைத்தனர். இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் கோடைகால பயிர்களான சிறு தானியம், எண்ணெய் வித்து, பயிறு வகைகளை சாகுபடி செய்ய அவர்களுக்கு தேவையான இடுபொருள், விதை மானியம் உள்ளிட்டவைகளை வழங்கி வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

உழவன் செயலி மூலம் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் மாணாவரி ஏக்கரில் இலவச உழவு செய்யும் இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பாண்டியன் தெரிவித்துள்ளார். இதில் வேளாண் உதவி இயக்குனர் ரமேஷ், வேளாண் அலுவலர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News