திருவள்ளூர் காந்திநகர்:தகாதவார்த்தையால் பேசிய நண்பனுக்கு அரிவாள்வெட்டு
சோழவரம் அருகே காந்திநகரில் தகாத வார்த்தையால் பேசிய நண்பருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை அடுத்த காந்திநகர் பகுதியில் வசிப்பவர் சூரியா (19). இவரும் அதே பகுதியை சேர்ந்த அஜித் (23) என்பவரும் நண்பர்கள். காந்திநகர் சுப்புராயலு திருமண மண்டபம் எதிரே நடந்து வந்துகொண்டிருந்த பொழுது, நண்பர்களான இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
சூர்யா தகாத வார்த்தையால் பேசியதையடுத்து, அஜித் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சூர்யாவின் நெற்றி மற்றும் வலது கையில் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டார். காயமடைந்த சூரியா, சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.