திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் விவசாய பிரிவு பொருளாளர் காலமானார்
திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் விவசாய பிரிவு பொருளாளர் காலமானார். அவருக்கு திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் இரங்கல் தெரிவித்தார்.;
திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் வர்த்தக பிரிவு பொதுச் செயலாளரும், மாவட்ட விவசாயப் பிரிவு பொருளாளருமான மோரை கிராமத்தில் வசிப்பவர் சீனிவாசன். இவர் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார்.
தகவலறிந்ததும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். ஜெயக்குமார் இரங்கல் தெரிவித்தார். பின்பு அவரை பிரிந்து வாடும் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் கட்சி நிர்வாகிகள், அரசியல் பிரமுகர்கள் இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.