திருவள்ளூர் மாவட்டம் ஆத்தூரில் மின்சாரம் தாக்கி 8 வயது சிறுவன் பலி!
திருவள்ளுர் மாவட்டம் ஆத்தூரில் மின்சாரம் தாக்கி 8 வயது சிறுவன் உயிரிழந்தான். போலீசார் விசாரணை
கண்ணூர் கிராமம் வீரபாண்டி தாலுகாவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஆத்தூரில் உள்ள வினோத் சேம்பரில் வேலை செய்து வருகின்றனர். கோபால கிருஷ்ணன் என்பவரின் மகன் கோகுல சாரதி (8). இவர் வினோத் சேம்பரில் உள்ள தனது வீட்டின் மின்விசிறியில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.