நூற்றெட்டீஸ்வரர் ஆலயத்தில் திருக்கல்யாணம் மற்றும் தெப்ப உற்சவம்

கோவில் அருகே உள்ள தாமரை குளத்தில் தெப்பத்தில் அம்பாளும், ஈஸ்வரரும் வீற்றிருக்க வான வேடிக்கைகளுடன் 3.முறை தெப்பம் வலம் வந்தது

Update: 2023-04-06 02:30 GMT

பொன்னேரி அருகே பழமை வாய்ந்த நூற்றெட்டீஸ்வரர் ஆலயத்தில் விமரிசையாக நடைபெற்ற திருக்கல்யாணம் மற்றும் தெப்ப உற்சவம் 

பொன்னேரி அருகே பழமை வாய்ந்த நூற்றெட்டீஸ்வரர் ஆலயத்தில் திருக்கல்யாணம் மற்றும் தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சின்னக்காவனம் பகுதியில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த அஷ்டோத்திரவல்லி உடனுறை நூற்றெட்டீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மூலவருக்கு அதிகாலை பால், தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, குங்குமம், மஞ்சள், தேன், பன்னீர், உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு தீப, தூப,ஆராதனை காண்பிக்கப்பட்டது. அம்பாளுக்கும், பெருமானுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. மாலை மாற்றும் சடங்குகள் முடிந்ததும் அம்பாளுக்கு மங்கல நாண் சூட்டப்பட்டது. தொடர்ந்து கோவில் அருகே உள்ள தாமரை குளத்தில் தெப்பத்தில் அம்பாளும், ஈஸ்வரரும் வீற்றிருக்க வான வேடிக்கைகளுடன் 3.முறை தெப்பம் வலம் வந்தது. அப்போது, அங்கு  நின்றிருந்த திரளான பக்தர்கள் ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய என முழக்கமிட்டு பக்தி பரவசத்துடன் இறைவனை வழிபட்டனர் . பின்னர் அங்கு வந்திருந்த திரளான பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.




Tags:    

Similar News