பொன்னேரி அருகே இருசக்கர வாகனம் மோதி வாலிபர் படுகாயம்!
பெரும்பேடு அருகே இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்தார். அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெரும்பேடு கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் ஹரிதாஸ் (எ) ரஞ்சித் குமார் (20). இவர் பொன்னேரியில் வேலை முடித்து விட்டு வீட்டிற்கு வந்துகொண்டிருந்தார். தேவனாஞ்சேரி அருகே அதி வேகமாக வந்த பைக் ஒன்று, ஹரிதாஸ் ஓட்டிவந்த ஸ்கூட்டர் மீது மோதியது.
இதில் ஹரிதாசுக்கு பலத்த காயம் ஏற்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.