எடப்பாளையம்: சட்டவிரோதமாக கஞ்சா விற்ற 3 பேர் கைது!

எடப்பாளையம் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். 1கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-06-01 14:16 GMT

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த எடப்பாளையம் அருகே கஞ்சா விற்பதாக உதவி ஆய்வாளர் ஆறுமுகத்துக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி பேஅங்கு செய்து கண்காணித்தார். அப்போது,  1 கிலோ 100 கிராம் கஞ்சாவை சிறுசிறு வட்டங்களாக போட்டுக் கொண்டிருந்தவரை கண்டுபிடித்தனர்.

போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓட முயன்றார். ஆனால்,  போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை செய்ததில், கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து காவல் நிலையத்திலிருந்து அழைத்து வந்து  விசாரித்தபோது, அவர்கள் அஜித்குமார், பிரதீபன், ஆனந்தராஜ் என்பதும், காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதுபற்றி மேலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News